வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகம்

Report Print Theesan in கல்வி

வீதி ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றினால் வீதி விபத்துக்களை தடுக்கலாம் என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரி.ஸ்ரீதரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து தனியார் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தல், வீதிக்கடவை, வீதி ஒழுங்கு முறைகளை பின்பற்றல், வீதி விபத்துக்களை தடுப்பது போன்ற போன்றவை நாடகமாக நடித்து காட்டப்பட்டன.

இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸார், தனியார் நிறுவன பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்