வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பூவரசந்தீவு கிராமத்தைச் சேர்ந்த ரஹ்மத்துள்ளா வஸீம் அக்ரம் என்ற மாணவனே இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
இவர் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்றுள்ளார்.
மிகவும் பின்தங்கிய விவசாய கிராமத்தில் கிடைக்க பெற்றுள்ள இவ்வாறான பெறுபேறுகள் குறித்த பாடசாலைக்கும், கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.