21 வருடகால வரலாற்றுச் சாதனை! நெகிழ்ச்சியின் உச்சத்தில் பொது மக்கள்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

சம்மாந்துறை வலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 203மாணவர்கள் சித்திபெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர் என வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயம் ஆரம்பிக்கப்பட்ட 1998ஆண்டுமுதல் இதுவரை 21ஆண்டுகளில் இவ்வாறான சாதனை பெறப்பட்டிருக்கவில்லை. 200ஜ தாண்டி இவ்வாறான உச்சக்கட்டச்சாதனையை எட்டியிருப்பது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

வலயத்திலுள்ள சம்மாந்துறைக்கோட்டத்தில் 132பேரும் நாவிதன் வெளிக்கோட்டத்தில் 36பேரும் இறக்காமக்கோட்டத்தில் 35பேருமாக 97பேர் சித்திபெற்றுள்ளனர்.

குறிப்பாக சம்மாந்துறை வலயத்தில் முதனிலை மாணவியாக சம்மாந்துறை தாருல் உலூம் வித்தியாலய மாணவி ஆயிஷாகனீம் அதிகூடிய 191புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதேவேளை அதிகூடிய எண்ணிக்கையான பெறுபேறுகளைப்பெற்ற பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் திகழ்கிறது. அங்கு 61மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்று பணிப்பாளர் நஜீம் மேலும் தெரிவித்தார்.

இந்தச்சாதனைக்காக முழுமூச்சாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இரவுபகலாக உழைத்த மாணவர்கள் ஆசிரியர் பெற்றோர்கள் அதிபர்கள் எமது கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் அணைவருக்கு வலயம்சார்பில் மனமார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதில் பூரிப்படைகின்றேன் என்று அவர் கூறினார்.

கடந்தவருடம் சம்மாந்துறைக்கோட்டத்தில் 57பேரும் நாவிதன்வெளிக்கோட்டத்தில் 30பேரும் இறக்காமக்கோட்டத்தில் 10பேருமாக 97பேர் சித்திபெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்