நெடுங்கேணி ஆயிலடி பாடசாலையில் 93 வருட வரலாற்றை மாற்றியமைத்த ஒரேயொரு மாணவி

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி ஆயிலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி எழுபரிதி திலகேஸ்வரன் 93 வருடகால பாடசாலை வரலாற்றை மாற்றியமைத்துள்ளார்.

இது குறித்து குறித்த பாடசாலையின் அதிபர் ச.சௌந்தரலிங்கம் தெரிவித்ததாவது,

எமது பாடசாலையில் இருந்து ஒரேயொரு மாணவி புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார். புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த எழுபரிதி திலகேஸ்வரன் என்ற மாணவி 178 புள்ளிகளைப் பெற்று இப் பாடசாலையில் முதன் முதலாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

எமது பாடசாலை 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட நிலையில் யுத்த பாதிப்புக்களை எதிர் கொண்டு 93 வருடங்களுக்கு பின்னர் முதன் முதலாக மாணவி ஒருவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றை மாற்றியமைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்