சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்ற மலையக மாணவர்கள்

Report Print Thirumal Thirumal in கல்வி

நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இன்று 4,987 பரீட்சை நிலையங்களில் 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு இம்முறை 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகளும் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனியார் பரீட்சாத்திகளுமாக மொத்தம் 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

மலையகத்தில் உள்ள பகுதிகளிலிருந்தும் குறிப்பாக ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், லக்ஷபான, கடவல போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவா்கள் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாமல் ஆா்வத்துடன் பரீட்சைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அருகில் உள்ள ஏதேனுமொரு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்