அறிவோம் ஆங்கிலம்: Did/Does என்ன வித்தியாசம்?

Report Print Raju Raju in கல்வி

ஆங்கிலம் என்பது இந்த காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒரு மொழியாகி விட்டது. கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எல்லாவற்றிலும் ஆங்கிலத்தின் தேவை முக்கியமாகி விட்டது.

இலக்கணம் என்பது ஆங்கிலத்தில் மிக முக்கியம். அது தான் நாம் சொல்ல வரும் விடயத்துக்கு சரியான அர்த்தம் கொடுக்கிறது. உதாரணத்துக்கு சில இலக்கணப் பிழைகளையும் அதன் சரியான வடிவங்களையும் பார்ப்போம்.

Did

Did என்றால் முடிந்து விட்ட / முடிக்கப்பட்ட ஒரு விடயத்தை குறிப்பது ஆகும்.

எடுத்துக்காட்டு : He Only Did It = அவன் தன் அதை செய்தான்

Did பயன்படுத்தும் போது அடுத்து வரும் சொல் செயலை குறிக்கும் வகையிலான வினை சொல்லாகவே இருக்க வேண்டும். மேலும் அது நிகழ் காலத்தை குறிக்கும் Present Tense ஐ தான் பயன்படுத்த வேண்டும்.

He Did Killed என்பது தவறு

He Did kill என்பது சரி.

Does

Does என்பது Did என்பதற்கான நிகழ்கால சொல்

Does பயன்படுத்தும் போது 'ச்' சேர்க்கை அதிலேயே இருப்பதால் அடுத்து வரும் வினை சொல்லில் 'ச்' சேர்க்க தேவையில்லை.

He, She போன்ற pronoun சொற்களை நிகழ்காலத்தில் பயன்படுத்தும் போது வினை சொல்லை 'ச்' சேர்த்து சொல்ல வேண்டும்.

He Come என்பது தவறு

He Comes என்பது சரி

She Dance Well என்பது தவறு

She Dances Well என்பது சரி.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments