பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம்

Report Print Printha in கல்வி

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதெல்லை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று (22) பாராளுமன்றத்தில் உயர்கல்வி அமைச்சினால் இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதெல்லை 57ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நாடுபூராவும் 13500 கல்விசாரா ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.

அண்மையில் பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் ஓய்வு பெரும் வயதெல்லை 60 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும் முன்வைத்து பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments