வல்லினம், மெல்லினம், இடையினம் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Amirah in கல்வி

தமிழில் உள்ள எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்து மூன்று என்பார் தொல்காப்பியர். மூன்றுதலையிட்ட முப்பதிற்று எழுத்து (தொல்.எழுத். புணரி. 1) என்பது அவருடைய வாக்கு.

இம்முப்பத்து மூன்றெழுத்துகளை அவர் முதல் என்றும் சார்பு என்றும் இருவகையாக்குகின்றார். இவரது கணக்குப்படி முதலெழுத்தின் எண்ணிக்கை முப்பதாகும்; சார்பெழுத்தின் எண்ணிக்கை மூன்று ஆகும் .

வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரும், நேமிநாதம் இயற்றிய குணவீரரும் முதலெழுத்து முப்பத்தொன்று என்கின்றனர்.

இவர்கள் ஆய்த எழுத்து ஒன்றனையும் சேர்த்துக்கொண்டனர். இவர்களுக்குப்பின் வந்தவர் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார். இவர், தொல்காப்பியரொடு ஒத்துக்கொண்டார்.

மொத்தத்தில், தமிழில் உள்ள எழுத்துகள் எல்லாமும் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்னும் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படும்.

உயிர்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்பர். இவை குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

  • குறில்:- அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் கூறுவர்.
  • நெடில்:- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.
மெய்

மெய்யெழுத்துக்களை ஒற்று என்றும், புள்ளி என்றும் கூறுவர். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் தமிழில் உள்ள மெய் எழுத்துக்கலாகும்.

இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படும்.

  • வல்லினம்:- வல்லினம், வங்கணம், வலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்களாம்.
  • மெல்லினம்:- மெல்லினம், மெங்கணம், மெலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம்.
  • இடையினம்:- இடையினம், இடைக்கணம், இடை ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் இடையின மெய்களாம்.
உயிர்மெய்

மெய்யோடு உயிர்கள் சேர்ந்து க, கா, கி, கீ என இவ்வாறு தோன்றும் எழுத்துக்கள் யாவும் உயிர்மெய் எனப் பெயர் பெறும். 18 மெய்களும் 12 உயிர்களும் சேர்ந்து 216 உயிர்மெய்கள் தோன்றுகின்றன.

ஆய்தம்

ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர். ஆய்தமும் தனக்கு இயல்பான மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் உண்டு. ஃ என்பது ஆய்த எழுத்தாகும்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments