பிரான்ஸ் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்: இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Printha in கல்வி

பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது.

பிரான்சு என்பது "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள் தரும் பிரான்சியா (Francia) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

பிரான்ஸ் நாடு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகள் மற்றும் தீவுகளை கொண்ட நாடாகும்.

இந்த நாடு பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதன் அண்டை நாடுகளாக அமைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும்.

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவில் பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்ஸ் விளங்கி வருகிறது.

உலகிலேயே பிரான்ஸ் தான் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

 • பிரான்ஸ் தேசிய மொழி எது? - French
 • பிரான்ஸ் அழைப்புக்குறி எண்? - 33
 • பிரான்ஸ் இணையக்குறி என்ன? - .fr
 • பிரான்ஸ் சுதந்திர தினம்? - 14 July 1789
 • பிரான்ஸ் நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 6,74,843 கிமீ2
 • பிரான்ஸ் தேசியக் கொடி?

 • பிரான்ஸ் தேசிய நினைவுச் சின்னம்?

 • பிரான்ஸ் நாட்டில் எத்தனை மாநிலங்கள் அமைந்துள்ளது? - 75 மாநிலங்கள்

 • பிரான்ஸ் மக்கள் தொகை எவ்வளவு? - 66.81 million

 • பிரான்ஸ் பிரபலமான உணவு எது? - Croissants

 • பிரான்ஸ் தேசியப் பறவை எது? - Gallic rooster

 • பிரான்ஸ் தேசிய மலர் எது? - lily

 • பிரான்ஸ் தேசிய மரம் எது? - yew tree

 • பிரான்ஸ் தேசிய விலங்கு எது? - rooster

 • பிரான்ஸ் தேசிய விளையாட்டு என்ன? - football

 • பிரான்ஸ் நாட்டின் நாணயம்? - ஐரோ (€) (EUR)

 • பிரான்ஸ் தலைநகரம் என்ன? - Paris

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்