கல்வி ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆயுதம்!

Report Print Nesan Nesan in கல்வி
12Shares
12Shares
lankasrimarket.com

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சி கண்டுள்ள இப் பிரதேசத்தின் கல்வியினை முன்னேற்றுவதில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார், அவரது சேவை பாராட்டுக்குரியது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வும் சேவையாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் சீ.பாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்வி ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆயுதம், அந்த ஆயுதத்தினைச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் கரிசனையாகச் செயற்பட வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் ஒரு சமூகத்தின் தலைவர்கள், இவர்கள் பாடசாலைக்கு பொறுப்பானவர்களாக இருந்தாலும், ஒரு சமூகத்தினை வழிநடத்தும், அத்தனை தகுதியும் பொறுப்பும் ஆசிரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இப்பகுதியினைப் பொறுத்தமட்டில் வெளிப்பிரதேசங்களில் இருந்தே இந்த பாடசாலைக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் வருகைத்தருகின்றனர். பின் தங்கிய இந்த பிரதேச மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளை இச்சமூகம் பாராட்டுவது காலச்சிறந்ததாகும் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வின்போது, அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். சரவணமுத்து, வைத்தியர் எஸ்.ஜே. அனீஸ் சம்மாந்துறை வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் கே.இரத்தினேஸ்வரன் உட்பட கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்