பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகை! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்வி அமைச்சு

Report Print Kalkinn in கல்வி
9Shares
9Shares
lankasrimarket.com

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் பாடசாலை செல்வதனை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகையொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் கல்ப குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கத் தொகையொன்று வழங்கப்படவுள்ளதாக ஊடகங்கள் பலவும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்ததாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

எனினும், இந்த செய்தி வெளியானதை அடுத்து நாட்டில் பல்வேறு தரப்பினரிடத்திலும் பாரிய சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

பொருளாதார பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்லாத பெரும்பாலான மாணவர்கள் நாட்டில் இருப்பதாகவும், கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் கல்ப குணரத்ன கூறியுள்ளார்.

எனவே, இவ்வாறான மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சரினால் இந்த கொடுப்பனவு பற்றி கருத்து கூறப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்