மாணவனின் புத்தகங்களுக்கு தீ வைத்த ஆசிரியை

Report Print Kamel Kamel in கல்வி

தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனின் பாடப் புத்தகங்களை பாடசாலையில் வைத்து கோபமடைந்த ஆசிரியையொருவர் தீக்கிரையாக்கியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவனின் தாய், கல்வி அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

புதிய வகுப்பறை ஒன்றுக்கு இடம் மாறிச் சென்ற போது குறித்த தினத்தில் மாணவன் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில், ஆசிரியை மாணவர் பாடசாலையில் விட்டுச் சென்ற புத்தகங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

குறித்த ஆசிரியை நடத்திய தனியார் புலமைப்பரிசில் வகுப்பிற்கு சமூகமளிக்காத கோபத்தினால் ஆசிரியை இவ்வாறு, மாணவனின் பாடப் புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியையின் தனியார் வகுப்பில் கல்வி கற்காத 21 மாணவர்களை பல்வேறு வழிகளில் இந்த ஆசிரியை துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்