பரீட்சைகளில் புதிய நடைமுறை அறிமுகம்?

Report Print Kamel Kamel in கல்வி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவ மாணவியர் பயன்படுத்தும் பரீட்சை சுட்டெண்ணை ஏனைய அனைத்து பரீட்சைகளின் போதும் பயன்படுத்தக்கூடிய வகையிலான நடைமுறையை அமுல்படுத்துவது குறித்து பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பயன்படுத்தப்படும் பரீட்சை சுட்டெண்ணை, பரீட்சார்த்திகள் சாதாரண தரம், உயர்தரம் உள்ளிட்ட ஏனைய பரீட்சைகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்