இன்று நள்ளிரவு இணையத்தில் வெளிவருகின்றது பெறுபேறுகள்

Report Print Shalini in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் 28ஆம் திகதி பெறுபேறுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்