காஞ்சிபுரம்- பெயர் காரணம் தெரியுமா?

Report Print Fathima Fathima in கல்வி

காஞ்சிபுரத்துக்கு கஞ்சிவரம் என்று பெயர், அதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த ஊரில் கால் ஆட்டினால் கஞ்சி வரும் என்று ஒரு பேச்சு வழக்கு இருந்தது.

அதாவது, இந்த ஊரில் நெசவு தொழில் செய்பவர் காலின் மூலமாக செய்வார், அதனால் அவர்களுக்கு உணவு வரும் என்பதாகும்.

காஞ்சிபுரத்தை பற்றிய பழைமையான குறிப்பு அகநானூற்றில் உள்ளது. “காஞ்சீயூர!” என்னும் சொல் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொல்லின் பொருள் “காஞ்சி மரங்கள் சூழ்ந்த ஊரைச் சேர்ந்தவனே” என்பதாகும். அதேபோல் “காஞ்சீயூரன்” என்னும் சொல் குறுந்தொகையில் உள்ளது.

“பயறுபோல் இனா பைந்தாறு படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சியூரன்” - குறுந்தொகை : 10:2-4

ஆதலால் காஞ்சி என்னும் சொல் காஞ்சி மரத்தினால் தான் வந்தது என்பது தெளிவாகிறது. “காஞ்சீயூர்” என்பது தான் காஞ்சிபுரத்தின் பழமையான பெயர்.

பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் “காஞ்சீயூர்” என்னும் பெயர் “காஞ்சிவரம்” அல்லது “கஞ்சிவரம்” என்றானது. பின் காலப்போக்கில் இப்பொழுது “காஞ்சிபுரம்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers