திமிங்கலம் பற்றி இந்த தகவல்கள் தெரியுமா?

Report Print Fathima Fathima in கல்வி
50Shares
50Shares
lankasrimarket.com

கடலுக்குள்ளேயே உலவும் பிரம்மாண்டமான உயிரினம் நீலத்திமிங்கலம்.

2 பேருந்து அளவுக்கு நீளம் கொண்ட திமிங்கலத்தின் எடை 120 டன் ஆகும், அதாவது 24 யானைகளின் எடைக்கும் சமம்.

80 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை, இதன் குட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு 5 கிலோ எடை அதிகரித்து வளரும்.

இதன் தோலின் உட்புறம் உள்ள கொழுப்பு அடுக்கு, உடலில் வெப்பத்தை தக்கவைக்க உதவுகிறது.

மேலும் கடல் நீரின் அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு உடல் அமைப்பு உள்ளது.

கடலின் மேற்பகுதிக்கு வந்து சுவாசித்துவிட்டு கடலுக்குள் சென்று வெகுநேரம் மூச்சை அடக்கித் தாக்கு பிடிக்கும் வல்லமை கொண்டது.

ஒலி எழுப்புவதன் மூலம் மற்ற திமிங்கலங்களுடன் தொடர்பு கொள்ளும்.

மனிதர்களை போன்றே நான்கு அறைகள் கொண்ட இதயம் இருக்கிறது, சராசரியாக 600 கிலோ எடையில் ஒரு சிறிய காரின் அளவு இருக்கும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்