விடைத்தாளில் ரூபாய் நோட்டுகள்: ஆசிரியர்களுக்கு மாணவர்களின் லஞ்சம்

Report Print Gokulan Gokulan in கல்வி

உத்திரபிரதேசத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்கள் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுகின்றது.

ஃபெரோசாபாத் (Firozabad) இடத்தில் உள்ள பாடசாலையில் தேர்வு முடிந்தவுடன் மாணவர்களின் விடைத்தாள்களை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்துள்ளனர்.

இதன்போதே விடைத்தாள்களிற்குள் 50 ,100, மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளது.

தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் ஆசிரியர்களிற்கு இதனை லஞ்சமாக வைத்துள்ளனர்.

எனினும் எந்த ஆசிரியரும் இந்த நோட்டுக்களை ஏற்றுக்கொள்வதில்லை என்றும், மாணவர்கள் எழுதி இருக்கும் விடையை செய்தே மதிப்பெண்கள் வழங்குவதாகவும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தேர்வு அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெரா வேலை செய்யவில்லை என்றும், சம்பந்தப்பட்ட துறைக்கு குறித்த விடயம் தொடர்பில் புகார் அளித்தபோதும் எவ்வித பதிலும் இல்லை எனவும் ஆசியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்