நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு

Report Print Fathima Fathima in கல்வி
46Shares
46Shares
ibctamil.com

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் காலை 8.30 மணிக்கு நீட் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் நாளைக்கே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள உத்தரவில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

நீட் நுழைவுச்சீட்டின் நகல், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

14417 என்ற எண்ணில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம், உதவித்தொகை பெறுவதில் சிரமம் இருப்பின் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்.

வெளிமாநிலம் என்றாலும் மாணவர்கள் தேர்வு செய்த மொழியிலேயே வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்