இரத்த அழுத்தம் தொடர்பில் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்

Report Print Givitharan Givitharan in கல்வி
247Shares
247Shares
ibctamil.com

ஆரோக்கியமான வாழ்விற்கு இரத்த அழுத்தத்தை சீராக பேணவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இவ்வாறு பேணுவதற்கு முன்னர் இரத்த அழுத்தம் தொடர்பிலான சில தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும்.

இதற்காக மே மாதமானது தேசிய இரத்த அழுத்த கற்கை மாதமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இரத்த அழுத்தம் தொடர்பிலான சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயத்திலிருந்து உடலின் ஏனைய பகுதிகளிற்கும், உடலின் ஏனைய பகுதிகளிலிருந்து இதயத்திற்கும் இரத்தம் கொண்டு செல்லப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

இதன்போது இரத்தம் கொண்டு செல்லப்படும் நாடி, நாளங்களின் சுவர்களில் விசை ஒன்று பிரயோகிக்கப்படும்.

இந்த விசையே இரத்த அழுத்தம் எனப்படுகின்றது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆரோக்கியமான மனிதர்களில் பொதுவாக இரத்த அழுத்தமானது 120/80 mm Hg ஆகக் காணப்படும்.

இந்த அளவீடானது 140/90 mm Hg ஐ விட அதிகரித்தல் உயர் இரத்த அழுத்தம் எனப்படும்.

தாழ் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தமானது 90/60 mm Hg ஐ விட குறைவாகும்போது அது தாழ் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகின்றது.

சாதாரண ஒருவரின் இரத்த அழுத்தமானது 120/80 mm Hg ஆக காணப்படுகின்ற போதிலும் 90/60 mm Hg இற்கும் 140/90 mm Hg இற்கும் இடையில் காணப்படுமாயினும் பாரிய ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்