ஆங்கிலம் அறிவோம் : சிலரை ‘Hyper’ என்கிறார்களே, ஏன்?

Report Print Kavitha in கல்வி

Hyperactive என்பதன் சுருக்கம். கிரேக்க மொழியில் hyper என்றால் அதிகப்படியாக, அதையும் தாண்டி என்று பொருள்.

Hyper ஆக இருப்பவர் மிகவும் ஆற்றல்வாய்ந்தவராக இருப்பார். பள்ளிக்கூடத்தில் உட்கார மாட்டார். உட்காராமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தொடர்ந்து உற்சாகமாகப் பல விஷயங்களைச் (விஷமங்களை) செய்துகொண்டிருக்கும் குழந்தைகள் இந்த hyper பிரிவில் அடங்க வாய்ப்பு உண்டு.

Hyperbole என்று ஒரு வார்த்தை உண்டு. உவமை, உவமானம் மாதிரி இதுவும் ஓர் அணிவகை. “எனக்கு இருக்கிற பசிக்கு நான் உன்னையே விழுங்கிவிடுவேன்” என்றோ “பசியில் என் பெருங்குடல் சிறுகுடலைத் தின்கிறது” என்றோ சொன்னால் அது hyperbole. அதிகப்படியாக ஒன்றை விவரிப்பது.

Hyperbole ஆகப் பேசலாம். ஆனால், hyperventilate செய்யக் கூடாது. Hyper ventilate என்றால் மிக அதிகமாகச் சுவாசத்தை வெளியேற்றுவது. இதன் மூலம் உங்களுக்கு ஒருவித மயக்க உணர்வு உண்டாகலாம்.

Hyperbaric என்றால் ஒரு வாயுவை அதன் வழக்கமான அழுத்தத்தைவிட அதிக அழுத்தத்தில் செயல்பட வைப்பது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers