உவமை மற்றும் உருவகத்திற்கு இடையான வேறுபாடு என்ன?

Report Print Kavitha in கல்வி

உவமை உருவக மாற்றஙகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்

உவமை

ஒரு பொருளை அதைவிடச்சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக்கூறுவது 'உவமை' ஆகும். உவமைத்தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமைந்துவரும்

எடுத்துக்காட்டு - மதிமுகம்=மதி போன்ற முகம்

இத்தொடரில் முகம் மதியோடு ஒப்பிடப்படுகிறது. மதி-உவமை, முகம் - உவமிக்கப்படும் பொருள் உவமேயம்).

உருவகம்

உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது 'உருவகம்' ஆகும். உருவகத்தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும் உவமானம் (உவமை) பின்னுமாக அமைந்துவரும்.

எடுத்துக்காட்டு - முகமதி

இத்தொடர் முகம்வேறு மதிவேறு என்னும் வேறுபாடின்றி, 'முகமே மதி' எனப்பொருள்படுமாறு அமைந்துள்ளது.

உவமை உருவக மாற்றம்

உவமைத்தொடரை உருவகமாக மாற்றும்பொழுது ,உவமேயம் முன்னும் உவமை பின்னுமாக வருமாறு தொடர் அமைக்கவேண்டும். உருவகத்தொடரை உவமைத்தொடராக மாற்றும்பொழுது உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக வருமாறு தொடரை அமைக்கவேண்டும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers