பங்கசுக்கள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 ஆச்சர்யமான விடயங்கள்

Report Print Givitharan Givitharan in கல்வி

பங்கசுக்கள் நம்மைச்சுற்றி, நமது உடலில், மண்ணில், வளியில் காணப்படுகின்றன.

ஆனால் இவை வெற்றுக்கண்ணால் பார்க்கமுடியாத அளவுக்கு மிகச் சிறியன.

இவற்றிலிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

அதேநேரம் இவை தாவர, விலங்கு நோய்களுக்கும் காரணமாகின்றன.

புவியில் உயிர்வாழ்க்கைக்கு பூஞ்சை இராச்சியம் மிக முக்கியமானதானதொன்றாகக் கருதப்படுகிறது.

இதுவரை மதிப்பிடப்பட்டுள்ள 3.8 மில்லியன் பங்கசுக்களில் 90 வீதமானவை இன்னமும் விஞ்ஞானிகளால் அறியப்படாதவையாகவேயுள்ளன.

பங்கசுக்கள் ஒரு விசித்திரமான உயிரினக்கூட்டம். இவைபற்றி நாம் தெரிந்துவைத்துள்ளவை மிக அரிதான விடயங்களே. இவற்றின் வாழ்க்கைவட்டம் விசித்திரமானது.

புவியில் இவற்றின் பங்களிப்பு பற்றி அறிவீர்களேயானால் இவை எவ்வளவு முக்கியமானவை என உங்களால் உணரமுடியும்.

நம்மில் பலர் சமையல் காளான்கள் அல்லது பென்சிலின் உற்பத்திக்குப் பின்னாலுள்ள பங்கசுக்கள் பற்றி அறிந்திருக்கக்கூடும்.

ஆனாலும் பங்கசுக்கள் பல முக்கிய செயற்பாடுகளுக்கு காரணமாகின்றன.

தாவரங்கள் நீர் மற்றும் கனியுப்புக்களை அகத்துறிஞ்சுவதிலும், மருத்துவத்தில் குருதிக் கொலஸ்திரோலின் அளவைக் குறைப்பதிலும், அங்கங்களின் மாற்றீடுகளிலும் பெரும் பங்களிப்புவகிக்கின்றன.

இவை பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து புதிய வகை உயிரியல் எரிபொருட்களை உற்பத்திசெய்கின்றன.

இவ்வளவு நன்மைகளுக்கப்பால் அவை எதிர்மறையான விளைவுகளையும் காட்டத்தான் செய்கின்றன.

இவை பயிர்கள், மரங்களை பேரழிவுக்குள்ளாக்குகின்றன, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சில பங்கசுக்கள் நோய் ஏற்படுத்தினும், இவை போசணை மறுசுழற்சியில் பங்கெடுக்கின்றன, காபனீரொக்சைட்டு மட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன.

இவற்றின் ஆபத்து கருதி இவற்றை நாம் புறக்கணிக்கின்றோம்.

ஆனாலும் நாம் தற்போது எதிர்கொள்ளும் காலநிலை மாற்றங்கள், மற்றும் பல சவால்கள் தொடர்பில் பங்கசு இராச்சியம் முக்கியமாக கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெருவிக்கின்றனர்.

இதோ! உங்களுக்காக பங்கசுக்கள் பற்றிய அந்த 10 அபூர்வ தகவல்களும்,

  1. பங்கசுக்கள் தமக்கென தனி இராச்சியத்தைக் கொண்டிருந்தாலும் அவை தாவரங்களைவிட அதிகளவில் விலங்குகளையே ஒத்திருக்கின்றன.
  2. இவற்றின் கலச்சுவரிலுள்ள இரசாயனங்களை நண்டுகளுடன் பரிமாற்றிக்கொள்கின்றன.
  3. இவை சில வராங்களிலேயே பிளாஸ்டிக்கை உடைக்கும் ஆற்றல் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  4. 9,000 வருடங்களுக்கு முன்னரே இவற்றின் சில இனங்கள் அல்ககோலிக் குடிபான உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களுள்ளன.
  5. குறைந்தது 350 இனங்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவை மாமைட்டு, சீஸ் என்பவற்றில் அடங்கியுள்ளன. இதில் ரபிள்ஸ் எனப்படும் பங்கசானது ஒரு துண்டு ஆயிரம் டொலர்கள் பெறுமதியானவை.
  6. 216 பங்கசு இனங்கள் மயக்கத்துக்கு காரணமாகின்றன என நம்பப்படுகிறது.
  7. அவை தாவரக்கழிவுகளை உயிரியல் எதனோலாக மாற்றுகின்றன.
  8. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் செயற்கை இறப்பர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இற்றாகோனிக் அமிலம் பங்கசுக்களிலிருந்தே பெறப்படுகிறது.
  9. பங்கசுக்கிலிருந்து பெறப்படும் உற்பத்திகள் பொலிஸ்ரைரின், தோல் பொருட்கள் மற்றும் கட்டடப்பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படக்கூடியன.
  10. எடுக்கும் சிறு மண் மாதிரியில் ஆயிரக்கணக்கான பங்கசு வகைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மறைந்துள்ளன அல்லது அறியப்படாமலுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சுமார் 2,000 பங்கசு இனங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers