வஞ்சப்புகழ்ச்சியணி என்றால் என்ன?

Report Print Kavitha in கல்வி
98Shares
98Shares
ibctamil.com

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

எடுத்துக்காட்டு

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்

பொருள் - கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருளாகும்.

அர்த்தம் - கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்