இந்தோனேசியா பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Kavitha in கல்வி

இந்தோனேசியா அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுகின்றது.

17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும்.

இந்தோனேசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான ஜகார்த்தா சாவகம் தீவில் உள்ளது.

ஜகார்த்தா மாநகரே உலகின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகக் கருதப்படுகிறது.

33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16 ஆவது பெரிய நாடாகும்.

இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகத் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் . இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.

இந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன

இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, அச்சே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகார்த்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும்

இவற்றின் சட்ட மன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்ட மன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. அச்சே மாகாணம் இசுலாமிய சட்டத்தின் மாதிரியை 2003 இல் இங்கு அறிமுகப்படுத்தியது.

இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தோனேசியா என்ற பொருள் வரக்காரணம்?

இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் நேசோஸ் (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும்.

இந்தோனேசியாவின் கொடி?

இந்தோனேசியாவின் சின்னம்?

இந்த நாட்டின் குறிக்கோள்: பின்னேகா துங்கால் இகா (ஜாவா மொழி) “வேற்றுமையில் ஒற்றுமை” என்றதாகும்.

இந்தோனேசியா நாட்டின் நாட்டுப்பண்: இந்தோனேசியா ராயா.

இந்தோனேசியாவின் தலைநகர்? ஜகார்த்தா

இதன் ஆட்சி மொழி - இந்தோனேசிய மொழி

இந்தோனேசியா நாட்டின் நாணயம் ?- உருபியா (IDR)

விடுதலை நெதெர்லாந்திடமிருந்து ஆண்டு? பிரகடனம் - ஆகஸ்டு 17 1945, அங்கீகாரம்டிசம்பர் 27 1949.

இந்தோனேசியாவின் தேசிய நினைவுச்சின்னம்?

இந்தோனேசியாவில் கிடைக்கும் பிரபலமான உணவு வகை?

அழைப்புக்குறி ? 62

இணையக் குறி ?.id

தொலைபேசி குறியீடு? +62

இந்தோனேசிய வரைபடம்?

இந்தோனேசிய மாகாணங்கள்?

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers