காகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in கல்வி

காகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள்.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது.

மூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

கய் லுன் அதன் பிறகு “காகிதத் துறவி” என்றே அழைக்கப்பட்டார்.

பிறகு காகிதமும் அதன் தயாரிப்பு முறையும் சீனாவிலும் அண்டைய நாடுகளுக்கும் பரவியது.

சீனாவிற்கு அடுத்ததாக இந்திய காகித பயன்பாட்டில் பழமை வாய்ந்தது எனுத் ஆதாரங்கள் உண்டு.

சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூங்கில் பட்டைகளில் தான் எழுதினர்.

சுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர்.

எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர்.

முகமது பின் துக்ளக், டெல்லி மற்றும் லாஹூர் பகுதிகளில் காகித தொழிற்சாலைகளை கட்டியிருந்தாக நம்பப்படுகிறது.

அவர் ஆட்சிக்காலத்தில், காகித பண முறையும் இருந்திருந்தது.

இந்தியா முழுவதும் மற்ற மாகாணங்களில் மெல்ல காகிதப்பயன்பாடு பரவத் தொடங்கியது.

8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனா மீது படையேடுத்தபோது காகித தயாரிப்பு முறைகளை அறிந்து கொண்டனர்.

அதன்பிறகு ஐரோப்பா மீது படையெடுக்கும் போது அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தனர்.

ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன.

ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.

மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர்.

பின்னர் பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும், வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது.

மேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் ,புத்தகம் அச்சிடவும் பெரும் அளவில் பயன்படுகிறது. இதுவே காகிதம் உருவாகிய கதையாகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்