10ம் வகுப்பு தேர்வு - திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Report Print Kavitha in கல்வி

தமிழ்நாடு கல்வி திட்டத்தை பின்பற்றிவரும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 97.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை(TN results) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் 38ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதியுள்ளனர்.

அதில் மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97% பேர் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

இதையடுத்து 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 3.7% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த பொதுத்தேர்வில் 152 சிறை கைதிகள் தேர்வு எழுதி இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்- 96.12%, ஆங்கிலம்- 97.35%, கணிதம்- 96.46%, அறிவியல்- 98.56%, சமூக அறிவியல்- 97.07% பாடவாரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers