பாலர் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in கல்வி

இலங்கையில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய மீண்டும் பாலர் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி பாலர் பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்