முதலாம் கட்டத்தின் கீழ் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பாடசாலைகள்

Report Print Vethu Vethu in கல்வி

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீளவும் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாக குழு உட்பட பணியாளர்கள் பாடசாலைக்கு வருகைத்தர வேண்டும்.

அன்று முதல் பாடசாலை வளாகத்தில் கிருமி நீக்கம் செய்தல், சுத்தப்படுத்தல், பாட அட்டவணை தயாரித்தல் உட்பட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தி 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்