ஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? திகதியை அறிவித்த கல்வியமைச்சு

Report Print Vethu Vethu in கல்வி

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள் மற்றும் அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டிருந்தன.

இதனையயடுத்து பாடசாலைகளை நான்கு கட்டங்களுக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது தீர்மானித்துள்ளது.

முதற்கட்டமாக நேற்று முன்தினம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமானது. எதிர்வரும் ஆறாம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்