93 வீதமான சித்தியினை பெற்று சாதனை படைத்துள்ள பாண்டியன்குளம் ஆரம்ப வித்தியாலயம்

Report Print Yathu in கல்வி
129Shares

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் ஆரம்பம் வித்தியாலயத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டதுடன், 93 வீதமான சித்தியினை மேற்படி பாடசாலை பெற்று சாதனை படைத்துள்ளது.

முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்போது பி.அபிஷா 172, ர.காவியா 170 ,ரே.நிவேதிதா 164, க.அபுர்னா 160 ஆகிய மாணவர்கள் திறமை சித்தி பெற்றுள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 4370 புள்ளிக்கு மேல் பெற்று 93% வீதம் சித்தியை பெற்றுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்