புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் சித்தி

Report Print Ashik in கல்வி
142Shares

மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி பாடசாலை இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.

வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மன்னார் கல்வி வலயத்தில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி றொசான்னா சைலின் ரவீந்திரன் 195 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும், நாயோலின் அப்ரியானா குபேர குமார் 194 புள்ளிகளையும் பெற்று 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் 34 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியை பெற்றுள்ளனர்.

மேலும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் சதீஸ்வரன் பிரியகன் 194 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் மன்னார் கோட்டத்தில் 110 மாணவர்களும், நானாட்டான் கோட்டத்தில் 28 மாணவர்களும், முசலி கோட்டத்தில் 6 மாணவர்களும் மொத்தமாக மன்னார் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன் போது மாவட்ட ரீதியாக 195 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்ற மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி றொசான்னா சைலின் ரவீந்திரன் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் அனைவரும் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்படைந்து இருந்தனர். ஆனால் பாடசாலை ஆசிரியர், அதிபர், பெற்றோர் ஆகியோரின் முயற்சியினால் நான் சித்தியடைய சந்தர்ப்பம் கிட்டியது.

அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எனது எதிர்கால லட்சியம் வைத்தியராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்வதே என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்