தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த அதிமுக: சீரும் பிரேமலதா

Report Print Nithya Nithya in தேர்தல்
தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த அதிமுக: சீரும் பிரேமலதா
221Shares
221Shares
lankasrimarket.com

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் கலையரசி மற்றும் மணிகண்டன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்- மக்கள் நலக் கூட்டணியை மக்கள் பார்க்கிறார்கள். சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி 130 முதல் 160 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து தான் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார். அதிமுக தங்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்துள்ளதாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் கூறி வரும் நிலையில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்தும் அதையே தான் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments