வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பரபரப்பு புகார்! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in தேர்தல்
0Shares

வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கமல்ஹாசன் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வாக்குசாவடிகளை பார்வையிட சென்ற போது அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் உடன் சென்று இருந்தார்.

வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது என்ற விதிமுறை உள்ளது.

இந்த சூழலில் வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்த போது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தது விதிமீறல் என்பதால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க தலைமை ஏஜென்ட் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்