சிங்கப்பூரில் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமோ யாகோப் தேர்வு

Report Print Kalaiyarasi Kalaiyarasi in தேர்தல்

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை ஹலிமா யாகோப் பெற உள்ள நிலையில், வாக்கெடுப்பு இல்லாமல் ஜனநாயகத்திற்கு புறம்பாக ஹலிமா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மலேசியாவில் சிறுபான்மையினமாக உள்ள முஸ்லீம் மலாய் பிரிவிச்சேர்ந்த ஹலிமா யாகோப், பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் செயல்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு பதவி அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள், உரிய தகுதிகளை பெற்றிருக்காத காரணத்தால், தேர்தல் நடத்தப்படாமலே ஹலிமா யாகோப் இத்தகைய உயரிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை இருந்த நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாகோப் அறிவித்திருந்தார்.

ஹலிமா யாகோப்பை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதால், ஹலிமா யாகோப் ஒருமனதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

சிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சியின் எம்.பியாகவும் இருந்த ஹலிமா யாகோப், போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் தேர்தல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers