சயிப் அலிகானை நிராகரித்த கத்ரினா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சையிப் அலிகானும், கத்ரினாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது, 5 வருடங்கள் ஆசையாக காதலித்து வந்த இவர்களது காதல் கதை உலகறிந்த ஒன்று.

இவர்களது காதல் கதையில் மறைந்து கிடந்த ஒரு உண்மையை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கத்ரினா மனம் திறந்து கூறியுள்ளார்.

சயிப் தன்னிடம் இரண்டு முறை காதலை தெரியப்படுத்தியபோது, அதனை நிராகரித்துள்ளேன்.

படப்பிடிப்பு ஒன்றிற்காக பாரிஸ் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஹொட்டல் ஒன்றில் வைத்து தனது காதலை சயிப் தெரியப்படுத்தினார்.

அதனை ஏற்க மறுத்த நான், இனிமேல் இப்படி கூறவேண்டும் என அவரிடம் தெரிவித்துவிட்டேன்.

அதன்பின்னர் Notre Dame Church - இல் வைத்து இரண்டாவது முறையாக அவருடைய காதலை என்னிடம் தெரியப்படுத்தினார்.

அப்போதும், எனது மனதில் சயிப் மீது காதல் வராத காரணத்தினால் அவரது காதலை நிராகரித்துவிட்டேன்.

அவர் காதலை தெரிவித்த சிறிது நாட்கள் கழித்துதான் அவர் மீது நான் காதல் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தேன்.

அதன்பின்னர், அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments