ஆடத்தெரியாத ரஜினி மகளுக்கு அவ்வளவு பெரிய வாய்ப்பா? கொதிக்கும் முன்னணி நடனக் கலைஞர்கள்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

பரத நாட்டியத்தில் போதிய பயிற்சி இல்லாத ரஜினியின் மகளுக்கு, ஐ.நா சபையில் ஆட வாய்ப்பு கிடைத்தது எப்படி என? முன்னணி பரதக் கலைஞர்கள் விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் ஐ.நா மன்றத்தின் தலைமையகத்தில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பரத நாட்டியம் ஆடினார்.

இதன் மூலம் ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் சார்பாக நடனமாடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் ஐ.நா சபையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரத நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்த பல முன்னணி நடனக் கலைஞர்கள், சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் ஆகியவை இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பரதத்திற்கு பெயர் போன தமிழகத்தில், தங்கள் வாழ்க்கையை பரதக் கலைக்காக அர்ப்பணித்த பல முன்னணி பரதக் கலைஞர்கள் இருக்கும் போது, ரஜினியின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஐ.நா சபைக்கான பெண்கள் முன்னேற்றத் தூதுவராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்ட போதும், இதே போன்ற விமர்சனம் எழுந்தது.

இதனிடையே ஐஸ்வர்யா நடனமாடும் காணொளியில் ஒருசில பாவங்களை மட்டுமே காட்டப்பட்டுள்ளதாகவும், முழு காணொளியையும் கண்டபின்னர் விமர்சிக்கலாமே எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments