எதிரிகளே உங்களை என்ன செய்கிறோம் பாருங்கள்: விஷால் அதிரடி

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், எதிரிகளே தயாராக இருங்கள் விரைவில் திருட்டு விசிடிகளை ஒழித்து கட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கான சங்கதேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தாணு, விஷால் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன.

இதில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட இயக்குனர்கள் வாக்களித்தனர். இன்று மாலை இந்த தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதில் மொத்தம் 1059 வாக்குகள் பதிவாகியிருந்தன.தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 173 வாக்குகளும், ராதா கிருஷ்ணன் 248 வாக்குகளும், விஷால் 362 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் 150 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் பின் அவர் கூறுகையில், இரண்டு ஆண்டுகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

மேலும் தேர்தலுக்கு முன்பு சொன்னதை இப்போதும் சொல்கிறேன். எதிரிகள் தயாராக இருங்கள். விரைவில் திருட்டி டிவிடிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments