கைது வாரண்டை April fool என நினைத்து ஏமாந்த நடிகை: திடீர் கைது

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து தரக்குறைவாக பேசியதாக பாலிவுட் நடிகை ராகி சாவந்தை பஞ்சாப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

நடிகை, அரசியல்வாதி, மொடல், தொலைக்காட்சி நடிகை என பல்வேறு துறைகளிலும் செயல்பட்டு வருபவர் ராகி சாவந்த்.

இவர் கடந்த மாதம் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வால்மீகி மீதும் அவரின் சமூகத்தின் மீதும் தரக்குறைவான விமர்சங்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பஞ்சாப் நீதிமன்றத்தில் ராகி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து மார்ச் 9-ம் திகதியன்று நடிகை ராகி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. எனவே, ராகியை கைது செய்ய பஞ்சாப் உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ராகியை கைது செய்வதற்காக டெல்லி விரைந்த பஞ்சாப் பொலிசார் இன்று மதியம் அவரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ராகி சாவந்த், என்னை கைது செய்யப்போகிறார்கள் என கேள்விப்பட்டதும் யாரோ April fool செய்கிறார்கள் என சாதராணமாக விட்டுவிட்டேன்.

ஆனால் உண்மை என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் நடிகை என்பதால் ஒருசிலர் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். நான் வால்மீகி மிது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments