பாலாஜியின் ரகசியத்தை அம்பலமாக்கிய மனைவி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த அவர் மனைவி நித்யா, பாலாஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நடிகர் பாலாஜி 21 வயதான நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாலாஜி மீது வைத்திருந்த ஆழமான காதலாலும் அளவிட முடியாத நம்பிக்கையாலும் வீட்டை மீறி அவரைக் கல்யாணம் செய்து கொண்டதாக கூறும் நித்யா,

”முதல் ஆறு மாசம் என்னோட சம்பளத்தில்தான் குடும்பம் நடந்துச்சு. அப்படி எல்லாம் கஷ்டங்களைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டுதான் அவரோடு வாழ்ந்தேன். அப்போலாம் நான் அவருக்கு நல்லவளாகத் தெரிஞ்சேன். சில வருஷங்கள் ஆனதும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்புறம்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது” என்றார்.

''வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணியிருக்கோம். மத்தவங்க முன்னாடி வாழ்ந்து காட்டியாகணும் என்கிற வைராக்கியத்தில் யார்க்கிட்டயும் எதையும் பகிர்ந்துக்காமல் இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல பிரச்னை அதிகமானதும் அம்மா வீட்டில் ஒரு வருஷம் இருந்தேன் என்றவர்,

''ஷூட்டிங் இல்லாத நாள்களில் காலையில் பதினொரு மணிக்கு மேல ஆரம்பிக்கிற குடி, நைட்டு ஏழு மணிக்கு இன்னும் அதிகமாக இருக்கும். அந்த எஃபெக்ட் விடிய விடிய இருக்கும். சண்டையோட பேச்சுவார்த்தை முத்தி, நைட்டு இரண்டு மணிக்கு மேலேதான் சண்டை ஸ்டார்ட் ஆகும். காலையில நாலு, அஞ்சு மணிக்கு நிற்கும். இப்படித்தான் என்னோட குடும்ப வாழ்க்கைப் போயிட்டு இருக்கும்” என்றார்.

பொறுக்க முடியாமல் காவல் துறைக்கு பலமுறைப் போன் பண்ணாலும் வீட்டுக்கு வந்து சமாதானப்படுத்திட்டுப் போயிடுறாங்க. அவர் பிரபலம் என்கிற ஒரே விடயத்தை வெச்சு எல்லா இடங்களிலும் தப்பிச்சுட்டு இருக்கார்.

இதுவரைக்கும் பொலிஸ் தரப்பில் இருந்து என்கிட்ட எந்த விசாரணையும் நடத்தலை. இப்படி சைக்கோ மாதிரி நடந்துக்கறவரோடு எட்டு வருஷமா குடும்பம் நடத்தியாச்சு. இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பொறுத்துப் போக முடியும் என்றவர் அவர்கூட வாழ்ந்தது போதும்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் அவர்கிட்ட விவாகரத்து கேட்டிருக்கேன் என்றார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments