மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்: அமலாபால் பேட்டி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

தன்னுடைய வாழ்வில் திருமணம் என்பது மீண்டும் நிச்சயமாக நடைபெறும் என நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகை அமலாபால், திரைப்பட இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இருவரின் திருமண வாழ்க்கையில் திடீர் கசப்பு ஏற்பட்டு கடந்த வருடம் சட்டப்படி விஜய்யும், அமலா பாலும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வந்தார் அமலா பால்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் என்பது முழுவதுமாக வெறுத்து ஒதுக்கும் வி‌டயம் அல்ல.

என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என கூறியுள்ளார். ஆனாலும், திருமணத்துக்கு இன்னும் நேரம் வரவில்லை எனவும் தனது கவனம் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது எனவும் அமலாபால் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments