நடிகர் பரணியால் பெண்களுக்கு ஆபத்தா? கலங்கும் மனைவி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு நடிகர் பரணியால் பாதுகாப்பில்லை என எழுந்த குற்றச்சாட்டால் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி உள்ளிட்ட 14 பேர் கலந்து கொண்டனர்.

இதில் உளவியல் காரணங்களால் நடிகர் பரணி வெளியேறினார். ஆனால் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு வார காலத்தில் பரணியை மிகவும் நன்றாக புரிந்து கொண்டதாக அவர் மனைவி ரேவதி பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் 100 நாட்களும் பங்கேற்று வெற்றிபெறும் நம்பிக்கையுடனே பரணி சென்றதாகவும், ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பரணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தங்களை துயரத்தில் ஆழ்த்தியதாகவும் ரேவதி மனம் திறந்துள்ளார்.

மட்டுமின்றி பரணியால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டை கேட்டு மிகவும் நொந்துபோனதாக கூறும் ரேவதி, தன் சகோதரர்களை அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் இதுபோன்ற ஒரு அபாண்ட குற்றச்சாட்டை முன்வைப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறும் ரேவதி, நாள் முழுக்க தங்களுடன் சிரித்துப் பேசியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

எஞ்சிய போட்டியாளர்கள் மீது தங்களுக்கு கோபம் எதுவும் இல்லை என்றும், ஆனால் சிறு ஆதங்கம் இருந்தது எனவும், தற்போது அதுவும் இல்லை எனவும் ரேவதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி போட்டியாளர்களில் சிறந்த ஒருவரை மக்கள் சரியாக தெரிவு செய்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments