பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பத்தாருக்கு ஹாட் அட்டாக் வந்தால் யார் பொறுப்பு?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாசார சீர்கேடு கிடையாது என நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் கூறியுள்ளார்.

அந்நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் அந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளேன்.

அதில் எனக்கு பிடிக்காத ஒரு விடயம், நடிகர் பரணி ஒரு பொம்பள பொறுக்கி என்று சொன்னதுதான்.

எனக்கு அவரை பற்றி தெரியும், அவர் அப்படிபட்டவர் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள நடிகர் நடிகைகளுக்கு அச்சுறுத்தல்கள் அல்லது ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால், அதனை பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டு உறுப்பினர்களுக்கு ஹாட்அட்டாக் வந்தால் இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஓவியா வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்கிறார், அவர் அழும்போது தனியாகத்தான் அழுகிறார், 10 ரூபாய் கொடுத்தால் 100 ரூபாய்க்கு நடிப்பது தான் அந்த ஜுலி என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers