போதும் இந்த எமோஷனல் டிராமா: வெளியேறும் முன் ஓவியா கூறியது

Report Print Santhan in பொழுதுபோக்கு
525Shares
525Shares
ibctamil.com

தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவு பேசப்படும் வார்த்தை என்றால் அது ஓவியா தான். பிக்பாஸ் வீட்டில் அவரை பங்கேற்பாளர்கள் ஒதுக்கினாலும், ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை.

ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நடிகை ஓவியா நேற்று பிக்பாஸ் வீட்டை வெளியேறுவதற்கு முடிவு எடுத்தார்.

ஏனெனில் ஆரவ் மீது கொண்ட காதலால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றார். அதன் பின் தன்னால் இங்கு இருக்க முடியவில்லை வெளியில் செல்கிறேன் என்று கூறினார். இதனால் ஓவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்புவதற்கு பிக்பாஸ் முடிவு செய்தார்.

அனுமதி அளிக்கப்பட்டதால், ஓவியா தன்னுடைய பெட்டி மற்ற துணிகள் அனைத்தையும் எடுத்து விட்டு கிளம்பினார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் சோகத்தில் இருந்ததைக் கண்ட ஓவியா, போதும் இந்த எமோஷனல் டிராமா நடிக்காதீங்க என்று கூறினார்.

இறுதியில் வீட்டை விட்டு வெளியில் போகும்போது கூட ஓவியா யாருக்கும் ஒரு பை கூட செல்லாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கிருந்த பங்கேற்பாளர்களான சினேகன், ரைசா உள்ளிட்டோர் கண்கலங்கினர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்