பிக்பாஸை இப்படியும் நடத்தலாம்: நடிகை கௌதமி

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
2325Shares
2325Shares
ibctamil.com

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார் நடிகை கௌதமி.

நடிகை கௌதமி நக்கீரன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமில்லை.. வேறு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

'ரியாலிட்டி ஷோ'க்கள் ஒரு மிகப்பெரிய வியாபாரம் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஒரு நிகழ்ச்சியே கூட, இத்தனை நாடுகளிலும், மொழிகளிலும் நடத்தப்படுகிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும். 'ரியாலிட்டி ஷோ ' என்பதைத் தாண்டி மீடியாவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வீச்சு இருக்கிறது. அந்த மீடியாவில் இது ஒரு கான்செப்ட் தான். அந்த வீச்சை வேறு விதமாக பயன்படுத்தலாம்.

இதே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருக்கும் அந்த பத்து பேரோ, இருபது பேரோ தெரியவில்லை... அவர்களை ஒரு வளமிழந்த, வறட்சியான கிராமத்திற்கு அழைத்துச்சென்று அங்க, ஒவ்வொரு வாரமும் ஒரு 'டாஸ்க்' கொடுக்கலாமே...

அதுவும் அவர்களுக்கு மிக புதியதான ஒரு சூழ்நிலை தான்... அங்க அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்த்து வெற்றியாளரை தேர்வு செய்யலாம். அப்படி செய்தால், அந்த நூறு நாட்கள் கழித்து அந்த கிராமமே மாறிடும்ல?

ஊரை சுத்தப்படுத்துறதோ, விவசாயத்துல இறங்கி உதவுறதோ, குழந்தைகளுக்கு மாலை நேரம் வகுப்புகள் எடுக்கவோ செய்து வந்தால் அதில் ரியாலிட்டி ஷோவுக்கான சுவாரசியமும் இருக்கும், நல்லதும் நடக்கும். இப்படி நல்ல விதமா நிகழ்ச்சிகள் நடந்தால், எதுவுமே தப்பில்ல என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்