சமூகவலைதளங்களில் வெளியான தகவல்: வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த பாலசுப்பிரமணியம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

நான் நலமாக இருக்கிறேன். இருமல், சளி என்று மருத்துவமனை செல்லும்போது அங்கு என்னை பார்த்தவர்கள் எனக்கு உடல் நலம் சரியில்லை என நினைப்பது முட்டாள் தனம். சமீபத்தில் எனது தங்கை கிரிஜாவை இழந்துவிட்டேன்.

இறுதி நிகழ்வுக்காக 10 நாட்கள் அங்கு சென்றுவிட்டேன். இது தான் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய காரணம். செப்டம்பர் 2 ல் கூட பெங்களூரில் நிகழ்ச்சி நடத்தினேன். என்னை பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புபவர்களின் உள்நோக்கம் புரியவில்லை. எனவே சமூக வலைதளங்களில் வருவதில்லை. அவர்களை கடவுள் வாழ்த்தட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்