குப்பைகளை அகற்றிய பிரபல நடிகை: குவியும் பாராட்டுகள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிரபல நடிகை தியா மிஸ்ரா மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையை சுத்தம் செய்துள்ளார்.

ஜுஹு கடற்கரைக்கு காலை 5 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மும்பை மாநகராட்சி துப்புர பணியாளர்களுடன் இவரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தால் இந்த கடற்கரையில் நானூறு டன் குப்பைகள தேங்கிவிட்டது. சதுர்த்தி கொண்டாடும் அதேவேளை கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமையாகும்.

இந்த குப்பை அகற்றுவதில் 1200 இளைஞர்கள் ஈடுபட்டனர், அவர்களுடன் நானும் இணைந்துகொண்டேன் என கூறியுள்ளார்.

தியாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...