பிக்பாஸின் இறுதிக்கட்டம்.. ஏமாற்றிய சினேகன்: விட்டுத் தருவதாக கூறிய சுஜா

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் கடுமையான போட்டிகள் நடத்தப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.

அதே போன்று போட்டிகளும் கடுமையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது, போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இறுதிவரை சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று இருவரும் புட் போர்டு அடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார். அதாவது ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது.

இவர்கள் இருவரில் யார் முதலில் காலை கார் மீது வைக்கிறார்கள் என்பதை கணேஷ் கவனிக்க வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.

அதன் படி கவனித்து வந்த கணேஷ், சினேகன் காலை கார் மீது வைத்ததாக குற்றம் சாட்டினார். இதனால் கணேஷ்-சினேகன் இடையே வாக்குவாதம் நடந்தது.

நான் இப்படி ஏமாற்றி தான் ஜெயிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என சினேகன் நீண்ட நேரம் கூறிக்கொண்டிருந்தார், ஆனால் இறுதியில் சுஜா வென்றதாக அறிவிக்கப்பட்டதால் சினேகனுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

நான் 20 மணி நேரத்திற்கும் மேல் போராடி போட்டியில் விளையாடினால் ஏமாற்றினேன் என கூறுவது பொறுத்து கொள்ள முடியாது என சினேகன் கதறி அழுதார்.

இதைக் கண்ட போட்டியாளர் சுஜா நான் வேண்டுமென்றால் பிக்பாஸிடம் கூறுகிறேன், நீங்களே வென்றதாக இருக்கட்டும் என்று கூறினார்.

அதற்கு சினேகன் மறுப்பு தெரிவித்ததுடன், இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற விரும்புவதாக அங்கிருக்கும் போட்டியாளர்களிடம் கூறினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்