நானும் உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும்: தாடி பாலாஜி மனைவிக்கு எச்சரிக்கை

Report Print Santhan in பொழுதுபோக்கு
2329Shares
2329Shares
lankasrimarket.com

பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி நித்யா அவர் மீது பல்வேறு புகார்களை காவல்நிலையத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வரும் வேளையில், சமீபத்தில் பாலாஜி குறித்த பல தகவல்களை அவரது மனைவி நித்யாவும், மகள் போஷிகாவும் பேசுவது போல் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து பாலாஜி கூறுகையில், குடும்ப விடயத்தை வெளியில் சொல்வதே தவறு, அதுவும் இவர் வீடியோ மூலம் அந்த பிரச்சனையை கொண்டு வந்து, ஒட்டுமொத்த குடும்ப மானத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

எனக்கும், நித்யாவுக்கும் இருக்கும் பிரச்சனை எல்லா வீடுகளிலும் நடப்பது போன்று தான், பிரபலங்கள் என்ற போது தான் அந்த பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது.

என்மீது பல குற்றச்சாட்டுகளை நித்யா கூறியபோதிலும், பொறுமையாகத்தான் இதுவரை இருக்கிறேன். அதற்குக் காரணம் தனது மகள் போஷிகா. அவருக்காக அமைதியாக இருக்கிறேன்.

என்னைப் பழிவாங்குவதாக நினைத்து, பேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், என்னை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். .

நித்யாவை குறைசொல்ல என்னிடம் 1000 விஷயங்கள் இருக்கின்றன. இருப்பினும் அமைதியாக இருக்கிறேன். அந்த வீடியோவை பார்க்கின்ற போது, போஷிகாவை கட்டாயப்படுத்தி பேசவைத்துள்ளனர்.

என்னால் முடிந்த அளவிற்கு தான் பொறுமையாக இருக்க முடியும், தொடர்ந்து தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை நித்யா தெரிவித்துவந்தால், நானும் உண்மைகளை ஊடகங்கள் முன்பு சொல்ல வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நித்யா தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றன. தேவைப்படும்போது அதை வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்