சம்பளம் தரலை: ஷங்கரின் உதவி இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என ஷங்கரின் உதவி இயக்குனர் முரளி மனோகர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும்.

டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

"கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி" - "என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்" என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...