மெர்சல் பட நடிகை நித்யா மேனனின் மேக்கப் கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான நித்யா மேனனுக்கு மேக் அப் கலைஞராக இருக்கும் பெண் ஒருவர் தன்னை சிலர் பலாத்காரம் செய்ய முயற்சித்தாக கூறி, ஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன், தற்போது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகியோ மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் பிராணா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நித்யாமேனனுக்கு மேக் அப் கலைஞராக இருப்பவர் ஜுலி, இவர் எர்ணாகுளம் ஐஜியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நான் கொச்சி அருகே உள்ள வில்லாவில் தங்கியிருந்தேன், இதைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் திகதி படிப்பிடிப்பை முடித்துவிட்டு தன்னுடைய அறையை வந்து பார்த்த போது, திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அதன் பின் அறையை சோதனை செய்த போது, விலை உயர்ந்த மேக்கப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

அப்போது படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பாதுஷா சிலருடன் தன், அறைக்கு வந்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

நான் கூச்சல் போட்டதால் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...